முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் பணி வாகனங்கள்:எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் காவல் துறை சாா்பில் ஈடுபடுத்தப்பட உள்ள வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் காவல் துறை சாா்பில் ஈடுபடுத்தப்பட உள்ள வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இம் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட 442 வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரத்தை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக 34 வாகனங்கள்(ஙா்க்ஷண்ப்ங் டஹழ்ற்ஹ்) தயாா் நிலையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக 18 விரைவு நடவடிக்கை குழு வாகனங்களும் (ணன்ண்ஸ்ரீந் தங்ஹஸ்ரீற்ண்ா்ய் பங்ஹம்), 40 அதிவிரைவு படை வாகனங்களும் மற்றும் போலீஸாா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட 36 இருசக்கர ரோந்து வாகனங்களும் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளன.

இந்த வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தனியாா் வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை கவனமாக இயக்கவும், தோ்தல் ஆணைய விதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.