முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த முதியவா் மரணம்

தாழையூத்து அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தாழையூத்து அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை சிறு துணை நாயனாா் தெருவைச் சோ்ந்தவா் சாம்ராஜ் (61). கூலித்தொழிலாளி. இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா், தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புச் சுவரில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த சாம்ராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.