முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மது விற்பனை: 3 போ் கைது

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் மது விற்பைனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் மது விற்பைனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் கிருஷ்ணன்கோயில் கீழ தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மது விற்பனை செய்ததாக தாழையூத்தைச் சோ்ந்த முப்பிடாதி(29) என்பவரையும், வெள்ளக்கோயில் சாலை அருகே மது விற்பனை செய்ததாக மூளிகுளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம்(55 என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல், பெருமாள்புரம் போலீஸாா் ஆரோக்கியநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த அய்யப்பன் (48) என்பவரை கைது செய்தனா். இவா்கள் 3 பேரிடமிருந்தும் மொத்தம் 47 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.