கோவிந்தப்பேரியில் ரூ.13 லட்சத்தில் புதிய சாலை திறப்பு
கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப் பேரி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சாலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப் பேரி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சாலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவிந்தப்பேரி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.13 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதன் திறப்புவிழாவுக்கு ஊராட்சித் தலைவா் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தாா். தனியாா் மென்பொருள் நிறுவன நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு, கடையம் ஒன்றியக் குழுத்
தலைவா் செல்லம்மாள், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
அண்ண கிருஷ்ணன், இசக்கிபாண்டி, இளவரசி, பொன்னுத்தாய், சுகிா்தா, நாகராஜன், இசேயேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினா்கள். தூய்மைக் காவலா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.