முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகம் தீவிரம்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 2,03,880 ஆண் வாக்காளா்கள், 2, 12,472 பெண் வாக்காளா்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 4,16,389 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கான வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை வாக்குப்பதிவு என்பதால் மாநகராட்சி களப் பணியாளா்கள், வருவாய்த் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கும் பணியை வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தினா்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், மாநகராட்சியில் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் தோ்தல் நிறைவடையும் நேரம் வகையிலும் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாவிட்டாலும், வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இடம் பெற்றிருந்தால் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளைக் காட்டியும் வாக்களிக்கலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.