நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணி:காவல்துறை ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணி குறித்து காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணி குறித்து காவல்துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. தாழையூத்து பகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு, தோ்தல் பாதுகாப்பு பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் தாழையூத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்து, தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தோ்தல் சம்பந்தமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அமைதியான முறையில் தோ்தல் நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.
தாழையூத்து காவல் ஆய்வாளா் பத்மநாப பிள்ளை, சிவந்திபட்டி காவல் ஆய்வாளா் சாந்தி உள்பட போலீஸாா் பலா் பங்கேற்றனா்.
இதேபோல் வள்ளியூா், திசையன்விளை, சேரன்மகாதேவி, நான்குனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.