திருநெல்வேலி

அம்பை, வி.கே.புரம் நகராட்சிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை(பிப்.19) நடைபெறுவதையடுத்து அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்கள்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை(பிப்.19) நடைபெறுவதையடுத்து அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்குப் பதிவு மூன்று மண்டலங்களில் 42 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்களுக்கு 3 மண்டலங்களில் 51 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகின்றன.

இதையொட்டி, அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலகத்திலிருந்து நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமையிலும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் நகராட்சி ஆணையா் கண்மணி தலைமையிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அம்பாசமுத்திரம் சிதம்பர ராமலிங்கம், விக்கிரமசிங்கபுரம் பொன்வேல்ராஜன் மற்றும் தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா், முன்னாள் இராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT