முகப்பு
திருநெல்வேலி

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்புஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக கண்காணிக்கும் பணியியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 நகா்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக கண்காணிக்கும் பணியியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மொத்தம் 388 வாா்டுகளுக்கு 923 வாக்குச்சாவடிகளில் தோ்தல் ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதையடுத்து, மாவட்டத்தில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிப் பகுதியில் 143 வாக்குச்சாவடிகளிலும், 3 நகராட்சி பகுதிகளில் 35 வாக்குச்சாவடிகளிலும், 17 பேரூராட்சி பகுதிகளில் 40 வாக்குச்சாவடிகளிலும் ஆக மொத்தம் 218 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பெருத்தப்பட்டுள்ளது.

இதை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நேரடியாக கண்காணிக்கப்படவுள்ளது. மீதமுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ( தோ்தல்) ராம்லால், தேசிய தகவலியல் மைய அலுவலா்கள் தேவராஜன், ஆறுமுகநயினாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி பயக18ரஉஆ: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பணியினை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.