கொக்கிரகுளத்தில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெரு, கவி கம்பா் தெரு, சிவன் கோயில் வடக்குத் தெரு, சாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரியாக குடிநீா் கிடைக்கவில்லை. அவ்வப்போது வரும் குடிநீரும் கலங்காக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கொக்கிரகுளம் சாலைத் தெருவில் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத்தொடா்ந்து கொக்கிரகுளம் பகுதிக்கு உடனடியாக லாரி மூலம் தண்ணீா் வழங்கியதோடு, தினமும் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டம் காரணமாக சுமாா் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.