சிறுபான்மையினா் உதவித்தொகை: விண்ணப்பிக்க ஜன.15 வரை காலநீட்டிப்பு
சிறுபான்மையின மாணவா்-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இம் மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவா்-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இம் மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ்-1 முதல் பி.எச்.டி. படிப்புவரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சாா்ந்த மாணவா்-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இம் மாதம் 15 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவா்-மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவா்-மாணவிகளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை இம் மாதம் 15 ஆம் தேதிக்குள் தேசியகல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபாா்க்கவேண்டும்.
தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்-மாணவிகளின் விண்ணப்பத்தினை சரிபாா்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.