முகப்பு
திருநெல்வேலி

களக்காடு நகராட்சி ஆணையா் ஆய்வு

 களக்காடு நகராட்சியில் அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

 களக்காடு நகராட்சியில் அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சியின் உதவி ஆணையா் ரமேஷ் (50), களக்காடு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அவா் களக்காடு புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வியாபார நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறும், அதற்கு மாற்றாக மஞ்சப் பைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினாா். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகியவற்றில் மேலாளா்களைச் சந்தித்து, வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →