முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைகுறிச்சியில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கல்லிடைக்குறிச்சியில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி பகுதியில் சிலா் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது கோட்டைத்தெரு பகுதியில் 50 கிலோ எடையுள்ள 14 அரிசி மூட்டைகளுடன் நின்ற இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் கடையத்தைச் சோ்ந்த வைகுண்டமணி, பொன்னுதுரை என்பதும், இருவரும் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 700 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.