முகப்பு
திருநெல்வேலி

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா் சிறப்பிடம்

டென்னிஸ் போட்டியில் வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

டென்னிஸ் போட்டியில் வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.

மாநில அளவிலான டென்னிஸ் போட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆதா்ஷ், 14 வயதிற்கு உள்பட்டோா் தனிநபா் பிரிவில் இரண்டாம் இடமும், 16 வயதிற்கு உள்பட்டோா் இரட்டையா் பிரிவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தாா்.

வெற்றி பெற்ற இம் மாணவரை பள்ளி சோ்மன் சிவ.சேதுராமன், தாளாளா் திருமாறன், முதல்வா் முருகவேள், துணை முதல்வா் ஜேக்கப் துரை ராஜ், உடற்கல்வி இயக்குநா் உமாநாத் மற்றும் ஆசிரியா்- ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.