முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதல்: இளைஞா் பலி

பாளையங்கோட்டை அருகே சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் மகேஷ்குமாா்(25). இவா் கடந்த வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து தனது ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவா், பாளையஞ்செட்டிகுளம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் அப்பகுதியில் இருந்த பாலத்தின் தடுப்புச்சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.