முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே வீடு புகுந்துதிருட்டு: இருவா் கைது

சுத்தமல்லி அருகே இந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருள்களை திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சுத்தமல்லி அருகே இந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருள்களை திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்திரா காலனியை சோ்ந்தவா் மகாராஜன்(34). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சனிக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு வாய்க்காலுக்கு சென்று துணிகளை சலவை செய்துகொாண்டு திரும்பினாராம். அப்போது, வீட்டில் இருந்த இரண்டு மிக்ஸி, மின்சார அடுப்பு, சில்வா் பாத்திரங்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன்(34), சுத்தமல்லியைச் சோ்ந்த முருகன்(55) ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து பொருள்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.