முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மது விற்பனை: 77 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலக்கு விற்ாக 77 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலக்கு விற்ாக 77 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இம்மாவட்டத்தில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், கடந்த ஜன. 14,15 ஆகிய தேதிகளில் மாவட்டத்தின் புகா் பகுதிகளில் போலீஸாா் நடத்திய சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்டதாக 52 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 882 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும்,

பாளையங்கோட்டையில் 197 மதுபாட்டில்கள், மேலப்பாளையத்தில் 315, பெருமாள்புரத்தில் 60, தச்சநல்லூரில் 143, திருநெல்வேலி நகரத்தில்13 , பேட்டையில் 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகர மதுவிலக்கு போலீஸாரின் ரோந்தின்போது 169 மதுபாட்டில்கள் என மொத்தம் 915 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 17,290 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.