முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 450 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 450 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 450 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 256 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 52,559 ஆகவும், மேலும் 168 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 50,034ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 439 போ் உயிரிழந்துள்ளனா்; 2086 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 28,028 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 31 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 27,060ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா்; 482 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.