முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் முதியவா் சடலம் மீட்பு

 திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

 திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கிடப்பதாக சந்திப்பு போலீஸாருக்கும், பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு துறையினா் சென்று சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.