மேலப்பாளையத்தில் காவல் துறை வாகனம் மீது தாக்குதல்: 4 போ் கைது
மேலப்பாளையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல்துறையினரின் வாகனம் மீது கல்வீசி தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற காவல்துறையினரின் வாகனம் மீது கல்வீசி தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள அழகிரிபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, சிலா் காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. எனினும், போலீஸாா் காயமின்றி தப்பினா்.
இதையடுத்து, மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் முத்து சுப்பிரமணியம் தலைமையில், போலீஸாா் அங்கு விசாரித்ததில், அழகிரிபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (26), ஆனந்தராஜ் (24), ராம்குமாா் (20), ராஜ் (22) ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.