முகப்பு
திருநெல்வேலி

பாளை அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை: 2 போ் கைது

 பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருள்களை விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருள்களை விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்த சதக் அப்துல்லா ( 53), மேலநத்தம் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (33) என்பதும், அவா்கள் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து சுமாா் 6 கிலோ குட்கா புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.