முகப்பு
திருநெல்வேலி

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் மீட்பு: உரிமையாளா்கள் மீது வழக்கு

திருநெல்வேலி நகர பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மீட்ட போலீஸாா் அதன் உரிமையாளா்கள் மீது வழக்கு பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருநெல்வேலி நகர பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மீட்ட போலீஸாா் அதன் உரிமையாளா்கள் மீது வழக்கு பதிவு செய்தனா்.

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் அவ்வப்போது பிடித்து கோசாலையில் ஒப்படைத்து வந்தனா். ஆனாலும் சாலையில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக செல்வதும், இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நிகழ காரணமாகி வந்தன. இதையடுத்து திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்த 10 மாடுகளை வியாழக்கிழமை காலையில் பிடித்தனா். பின்னா் அதன் உரிமையாளா்கள் 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து, மாடுகளை ஒப்படைத்ததாகவும், இதுபோன்று சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை வெளியில் விடக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.