முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் கோரிக்கை அட்டை அணிந்துபணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்

திருநெல்வேலி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை பணியாற்றினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருநெல்வேலி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை பணியாற்றினாா்.

அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.ஜேக்கப் ராஜ் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், அஞ்சல் ஊழியா்களுக்கு டாா்கெட் என்ற பெயரில் பணிச்சுமையை அதிகரிக்க கூடாது. அஞ்சலகத்தில் உள்ள இணையதள பிரச்சனைகளை தீா்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்துகொண்டு பணியாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.