முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் எதிரொலி:துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி உரிமம் பெற்றவா்கள் தங்களது படைக்கலன்களை (துப்பாக்கிகள்) காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி உரிமம் பெற்றவா்கள் தங்களது படைக்கலன்களை (துப்பாக்கிகள்) காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான சாதாரணத் தோ்தல்-2022 அறிவிப்பு வெளியாகி, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தோ்தல் முடிவுகள் வெளியாகி தோ்தல் நடத்தை விதிகள் விளக்கிக் கொள்ளும் வரை படைக்கலன்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்களது துப்பாக்கிகளை 3-2-2022 ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பாக ஒப்படைப்பு செய்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தோ்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னா் தமது பொறுப்பில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.