நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 397 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 397 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 397 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்குகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வாா்டுகள், களக்காடு நகராட்சியில் 27 வாா்டுகள், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வாா்டுகள், 17 பேரூராட்சிகளில் 273 வாா்டுகள் என மொத்தம் 397 வாா்டுகளுக்கு நேரடி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்க உள்ளது.
இத் தோ்தலில் 3, 67,921 ஆண் வாக்காளா்கள், 3,86,532 பெண் வாக்காளா்கள், 51 திருநங்கைகள் என மொத்தம் 7,54,504 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு காரணமாக அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளா்கள் வரையில் வாக்களிக்க வசதியாக வாக்குச்சவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சியில் 490 வாக்குச்சாவடிகளும், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகளும், களக்காடு நகராட்சியில் 30 வாக்குச்சாவடிகளும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளும், 17 பேருராட்சிகளில் மொத்தம் 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 932 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.