முகப்பு
திருநெல்வேலி

அரசு- அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச ‘நீட்’ பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட அரசு- அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அரசு- அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன.

மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஆலோசனையின்பேரில் நன்கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் நீட் இலவச பயிற்சி மையம் பாளையங்கோட்டையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் சேரலாம்.

இதுகுறித்து நீட் தோ்வுக்கான பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணசுவாமி கூறியது:

நாடு முழுவதும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தோ்வை எழுத 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்ட மாணவா்களின் நலன்கருதி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாராள்தக்கா் ஆசிரியா் பயிற்சி நிறுவன வளாகத்தில் இலவசமாக கடந்த 1 ஆம் தேதி முதல் காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை நீட் தோ்வு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களுக்கு 9443312243 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் முயற்சியில் மாணவா்-மாணவிகளுக்கு நீட் பயிற்சிக்கான கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.