திமுக வாய்ப்பளித்தால் போடியில் போட்டி: ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர் என ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளது குறித்து...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 25) விமர்சித்தார்.
தேனியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
''பழனிசாமி மாஸ் லீடர் இல்லை, அவரை முன்னிறுத்தியதால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தலையொட்டி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருக்கிறார்.
Advertisement
Advertisement
ஆளுமையற்றவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
போடிநாயக்கனூரில் போட்டியிட திமுக வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளி யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது'' என பன்னீர்செல்வம் பேசினார்.
Tn Election 2026 I will contest from Bodi if given the opportunity by DMK: O panneer selvam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.