FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜோயா அக்தர் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு!

பெண் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோயா அக்தர் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு குறித்து...

Updated On : 25 மார்ச் 2026, 6:55 pm IST
ஜோயா அக்தர், அவரது திரைக்கதை புத்தகத்தின் முதல் பக்கம். - படம்: இன்ஸ்டா / ஜோயா அக்தர்.
பகிர்:

பாலிவுட்டின் முக்கியமான பெண் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோயா அக்தர் தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜோயா அக்தர் எழுதிய புதிய படத்தின திரைக்கதையை இளம் இயக்குநர் அர்ஜுன் வரேன் சிங் இயக்குவதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே, ஜோயா அக்தர் எழுதிய ’கோ கயா ஹம் கஹான்’ என்ற படத்தினை 2023ல் இயக்கியிருந்தார்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜாவேத் அக்தரின் மகளும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோயா அக்தர் முக்கியமான படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். தலாஸ், பாம்பே டாக்கீஸ், லஸ்ட் ஸ்டோரிஸ், கல்லி பாய், கோஸ்ட் ஸ்டோரிஸ் ஆகிய படங்கள் மூலமாக ஜோயா அக்தர் கவனம் ஈர்த்துள்ளார்.

Advertisement

Advertisement

கடைசியாக ஜோயா அக்தர் தி ஆர்கிவ்ஸ் எனும் படத்தை இயக்கியிருந்தார். தஹாத் எனும் இணையத் தொடருக்கும் கதை எழுதியிருந்தார். தற்போது, ’எ பர்ஃபெக்ட் மேட்’ என்ற புதிய படத்துக்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தினை ’கோ கயா ஹம் கஹான்’ என்ற படத்தினை இயக்கிய அர்ஜுன் வரேன் சிங் இயக்குகிறார். இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகுமன எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Zoya Akhtar announces new project, 'A Perfect Match'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments