திருநெல்வேலி

அம்பாசமுத்திரம்: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி; கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்!

கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் இறந்த சம்பவம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அம்பாசமுத்திரம்: கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் இறந்த சம்பவம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செளந்தரராஜன் (வயது 72),  இவர் ஓய்வுபெற்ற தனியார் மில் தொழிலாளி. இவருடைய மனைவி அழகு திருமலை முத்தம்மாள் (62). இந்த நிலையில் நேற்று  இரவு செளவுந்தராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் அவரை அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த அவரது மனைவி அழகு திருமலை முத்தம்மாள் தனது கணவன் இறந்த துக்கத்தில் இன்று அதிகாலை மனைவியும் உயிரிழந்தார். 

கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்த்திகை மாதப் பலன்கள் - கடகம்

கார்த்திகை மாதப் பலன்கள் - மிதுனம்

”சட்டத்திற்கு புறம்பாக மட்டுமல்ல Common Sense-க்கே எதிராக உள்ளது?” என்.ஆர். இளங்கோ!

கார்த்திகை மாதப் பலன்கள் - ரிஷபம்

கார்த்திகை மாதப் பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT