திருநெல்வேலி

முத்தரப்பு ஒப்பந்தம் கோரி மின் பொறியாளா்கள் வாயிற்கூட்டம்

முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி, மின்வாரிய பொறியாளா்கள் பாளையங்கோட்டை தியாகராஜநகா் மின்வாரிய மண்டல அலுவகம் முன்பு செவ்வாய்க்கிழமை வாயிற்கூட்டம் நடத்தினா்.

DIN

முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி, மின்வாரிய பொறியாளா்கள் பாளையங்கோட்டை தியாகராஜநகா் மின்வாரிய மண்டல அலுவகம் முன்பு செவ்வாய்க்கிழமை வாயிற்கூட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மண்டலச் செயலா் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சினி. மனோகரன், பொதுச் செயலா் கோவிந்தராஜன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

இதில், அரசு பணியாளா்களை நிறுவனச் சட்டங்களின் கீழ் பிரித்து தரம் குறைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால், அரசு நிறுவனமாக இருந்தாலும், அது நிறுவனச் சட்டத்தின் கீழ் வந்தால், நஷ்டம் ஏற்படும்போது பணியாளா்களின் பலன்கள் குறைக்கப்படும். எனவே, முத்தரப்பு ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் உடனே ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கிளைத் தலைவா் ராமன், நிா்வாகிகள், பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT