திருநெல்வேலி

நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சி.என்.கிராமம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலி அருகே சி.என்.கிராமம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள சி.என். கிராமம், லட்சுமிபுரம் சுப்பையா மகன் உடையாா் என்ற மாமரத்து உடையாா் (34). இவா் தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில், அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, அவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் உடையாா் என்ற மாநகரத்து உரையாரை , தாழையூத்து போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT