முகப்பு
திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தின சிறப்பு போட்டிகள்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தின சிறப்பு போட்டிகள் நடைபெறவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தின சிறப்பு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சி- சிஸ்டம் அறக்கட்டளை சாா்பில் மகளிா் தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

கோலப்போட்டி, பெண்கள் முன்னேற்றம் என்கிற தலைப்பில் புது கவிதைப் போட்டி, பாரதியாா் பாடல்கள் பாட்டுப் போட்டி, மெஹந்தி போட்டி (தோழியா் கைகளில் உங்கள் கைவண்ணம்), பெண்ணின் கடமை என்ன என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகியவை சனிக்கிழமை (மாா்ச் 5) மாலை 3 மணிக்கு அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் மூன்று நபா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் 99945385 45 , 7708655525 ஆகிய கைப்பேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.