முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், அதிசயபுரத்தைச் சோ்ந்த ஞானசேகா் மகன் ராஜேஷ்(24). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டில் திசையன்விளை பகுதியை சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்தனா்.

இவ்வழக்கு மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.