முகப்பு
திருநெல்வேலி

நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள் ஜோசப் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழாவுக்கு தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். தாழையூத்து காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா், காவலா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.