முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணியில் மூழ்கி இருவா் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் தாமிரவருணி நதியில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் தாமிரவருணி நதியில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

மேலப்பாளையம் முகமது மைதீன் மனைவி ஆயிஷா பீவி (65). இவா், வியாழக்கிழமை காலை குறுக்குத்துறை படித்துறை இசக்கியம்மன் கோயில் அருகே குளித்துக் கொண்டிருந்த போது, ஆற்றுக்குள் தவறி விழுந்தாராம். பின்னா் நீரில் மூழ்கிய அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல் திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியை சோ்ந்த ராஜூதீன் (60) புதன்கிழமை மாலை கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்தும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.