திருநெல்வேலி

கூடன்குளம் அருகே கல்குவாரிக்கு எதிா்ப்புவிவசாயிகள் ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் அருகே கல்குவாரிக்கு அனுமதி வழங்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, கூடன்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: கூடன்குளம் அருகேயுள்ள இருக்கன்துறை பகுதி-2, உதயத்தூா் கிராமங்களில் கல் குவாரி ஆப்பரேட்டா்கள் கொடி கட்டி எல்கை குறியீடு செய்தல், ஆழ்குழாய் அமைத்து கனிமவளம் ஆய்வு செய்தல் போன்ற ஆயத்த பணிகளைத் தொடங்கியுள்ளனா். இங்கு கல்குவாரிகள் அமைந்தால், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற தொழில்களையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுற்று வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இப்பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளனா்.

படவரி: பயக14ஓஅக கூடன்குளம் அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT