பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர். 
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு மினிமாரத்தான்

பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா மற்றும் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத விழா விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா மற்றும் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத விழா விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொருநை-நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் மார்ச் மாதம் 17 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத விழா ஆகியவற்றையொட்டி மினிமாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 550 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் நோவா பயிற்சி அகாதெமி மாணவர் அஜித்குமார் முதலிடமும், கே.ஜி.எஸ்.கலைக்கல்லூரி மாணவர் பார்வதி நாதன் இரண்டாமிடமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் பாலஇசக்கி மூன்றாமிடமும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் ஆலங்குளம் புனித ஜெசப் பள்ளி மாணவி ஆலின் லிண்டா முதலிடமும், மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ.சென்ட்ரல் பள்ளி மாணவி ஜெசிலி இரண்டாமிடமும், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளி மாணவி ஓவியா மூன்றாமிடமும் பிடித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீங்கள்தான் மாரி அந்த பைசன்: மணிரத்னம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி மினி பேருந்துகளை இயக்க திட்டம்!

தொடர் மழை: குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 1,000 பாம்புகள் மீட்பு!

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு தளர்வு!

26,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி! இன்றைய பங்குச்சந்தை நிலவரம்...

SCROLL FOR NEXT