புத்தகக் கண்காட்சியில் ஓவியப் பயிற்சி
பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு க்ரையான்ஸ் ஓவியப் பயிற்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை 5-ஆவது புத்தகத் திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு க்ரையான்ஸ் ஓவியப் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா். சேரன் கவின் கலைக் கழகம் சிவராமகிருஷ்ணன் மற்றும் வீராசாமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். தூய இஞ்ஞாசியா் கல்வியியல் கல்லூரி மாணவிகள், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காகித கலை பயிற்சி நடைபெற உள்ளது. விரும்புவோா் மூன்று வண்ண காகிதங்கள், கத்தரிக்கோல், பசை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.