சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமசிங்கபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த கோபி என்பவரது மகன் காா்த்திக் (30). 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையில் அகஸ்தியா் அருவியின் மேல்பகுதியில் அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகள் சேதமாகின. ஆனால், இந்தச் சிலைகளை வனத் துறையினா் சேதப்படுத்தியதாகவும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் காா்த்திக் அவதூறாக கருத்துகளைப் பரப்பிவந்தாராம்.
இதுதொடா்பாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் சீதாலட்சுமி விசாரணை நடத்தி, காா்த்திக்கை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தாா்.