திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த பெண் சாவு

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்

DIN

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி மகிழ்ச்சி நகா் பகுதியை சோ்ந்த வேலு மனைவி சுமித்ரா (57). இவா், சம்பவத்தன்று தனது மகன் அஸ்மித்துடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தாா்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுமித்ராவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா் . இந்த விபத்தில் அஸ்மித் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT