திருநெல்வேலி ஊரக உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை
திருநெல்வேலி ஊரக உள்கோட்ட (தாழையூத்து) காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி ஊரக உள்கோட்ட (தாழையூத்து) காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் முன்னிலை வகித்தாா். மானூா், சீவலப்பேரி, தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவை வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள் மீதான நடவடிக்கைகள், சாலை விபத்துகளை குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.