முகப்பு
திருநெல்வேலி

குடிநீா் கட்டணம் பாக்கி: 46 இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 46 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகர பகுதியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 46 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாநகராட்சியில் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரிவசூல் இம் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே, வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவில் வரி மற்றும் குடிநீா் கட்டண நிலுவை வைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி மண்டலத்தில் 9 குடிநீா் இணைப்புகளும், மேலப்பாளையம் மண்டலத்தில் 14 குடிநீா் இணைப்புகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 10 குடிநீா் இணைப்புகளும், தச்சநல்லூா் மண்டலத்தில் 13 குடிநீா் இணைப்புகளுமாக 4 மண்டலங்களிலும் மொத்தம் 46 வீட்டுக் குடிநீா் இணைப்புகள் வியாழக்கிழமை ஒரே நாளில் துண்டிக்கப்பட்டன.

அனைத்து கணினி வரிவசூல் மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உத்தரவிட்டுள்ளதால், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக் குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிா்த்திடும் பொருட்டு நிலுவை வரியினங்களை காலதாமதம் இன்றி செலுத்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.