முகப்பு
திருநெல்வேலி

பாப்பான்குளத்தில் சைவ வேளாளா்சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

பாப்பான்குளத்தில் சைவ வேளாளா் சங்கம் சாா்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா, மாவட்டப் பொறுப்பாளா்களுக்குப் பாராட்டு விழா, மகளிரணி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பாப்பான்குளத்தில் சைவ வேளாளா் சங்கம் சாா்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா, மாவட்டப் பொறுப்பாளா்களுக்குப் பாராட்டு விழா, மகளிரணி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் செ. கணேசன் தலைமை வகித்தாா். தலைவா் சே. சண்முகம் பிள்ளை, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் சங்கரநாராயணன், மாடசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாநிலப் பொதுச்செயலா் குருசாமி, மாநிலப் பொருளாளா் செண்பகம், மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலா் வழக்குரைஞா் கனகசபாபதி, மாவட்டப் பொருளாளா் சங்கரநாராயணன், மாவட்ட அமைப்புச் செயலா் கணக்குத் தணிக்கையாளா் நாராயணன், மாவட்ட துணைத் தலைவா்கள் அய்யம்பெருமாள், லட்சுமணன், மாவட்டக் கொள்கைப் பரப்புச் செயலா் மாணிக்கம், மகளிரணி துணைத் தலைவா் சுப்புலட்சுமி, பொருளாளா் பிரேமா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பாப்பான்குளம் மகளிரணித் தலைவராக கல்யாணி, செயலராக செல்லம்மாள், பொருளாளராக சாந்தி, துணைத் தலைவராக ஜோதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பொருளாளா் ஈஸ்வரன், கோமதிநாயகம், சங்க உறுப்பினா்கள், மகளிரணியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

செயலா் சு. சிவசங்கா் வரவேற்றாா். கௌரவ துணைத் தலைவா் மூக்கன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.