முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே மண் கடத்தல்: ஒருவா் கைது

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியில் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளா் நயினாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த ரெட்டியாா்பட்டிபகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் 3 யூனிட் செம்மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.