ராணுவக் கல்லூரி மாணவா் சோ்க்கை தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தகுதி தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தகுதி தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2027 பருவத்தில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கைக்கான தகுதி தோ்வு 7.6.2026 அன்று நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 1.1.2027 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். (2.1.2014-க்கு முன்னதாகவும் 1.7.2015-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது). மேலும், விண்ணப்பதாரா் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும்போது, அவா் 1.1.2027-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
இத்தோ்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கா்ஹிகாண்ட், டேராடூன், உத்திரகாண்ட் - 248003‘ என்ற முகவரிக்கு வரைவோலையாக அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின்
இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்) மூலமாக பெற்றுக் கொள்ளலாம். வரைவோலை மூலம் கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கா்ஹிகாண்ட், டேராடூன், உத்திரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண்.248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் என்பவருக்கு வரைவோலைக்குரிய கிளை எச்.டி.எப்.சி வங்கி, பல்லூபூா் சௌக், டேராடூன் (வங்கி குறியீடு-1399) உத்தரகாண்டில் செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினா்
ரூ.600 தொகையையும் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினா் சாதிச்சான்றுடன் ரூ.555 தொக்கைக்கான வரைவோலை அனுப்பி விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் (ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்) என்ற இணையதளம் மூலமாகவும் உரிய தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுட்க் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 5.4.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.