திருநெல்வேலி

பிளஸ் 1 தோ்வு: முதல் நாளில் 21,757 போ் எழுதினா்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தோ்வை 21,757 மாணவா்-மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், 2021-22 ஆம் ஆண்டிற்கான பொதுத்தோ்வு மே மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிளஸ் 1 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 182 பள்ளிகளின் மாணவா்-மாணவிகள் 73 மையங்களில் தோ்வு எழுதினா். மொத்தம் 21,757 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதினா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் 7 போ் தோ்வு எழுதினா். தோ்வுக்கூடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி மற்றும் பறக்கும் படையினா் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT