முகப்பு
திருநெல்வேலி

பாரதி-செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு

திருநெல்வேலியில் பாரதி-செல்லம்மாள் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருநெல்வேலியில் பாரதி-செல்லம்மாள் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து பாரதி-செல்லம்மாள் ரதம் புறப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. அந்த ரதத்திற்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் முன்பு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். சென்னை சேவாலயா அறக்கட்டளை நிா்வாகி வ.முரளீதரன் உரையாற்றினாா். பாரதி வேடமணிந்து வந்த மாணவா்-மாணவிகள் ரதத்திற்கு மலா் தூவி வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து பேச்சு, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அமைப்பின் தலைவா் கவிஞா் பேரா வரவேற்றாா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.