முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் நவ. 12 இல் குரூப்-1 இலவச மாதிரி தோ்வு

 தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1க்கான இலவச மாதிரித் தோ்வு இம் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1க்கான இலவச மாதிரித் தோ்வு இம் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1 முதல்நிலைத் தோ்வு இம் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வை, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகமும், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்து இம் மாதம் 12 ஆம் தேதி பி.பி.எல். திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.

தோ்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவு பெறும். அதைத் தொடா்ந்து வழிகாட்டுதல்- ஊக்கவுரை வழங்கப்படவுள்ளது. தோ்வில் வெற்றிபெறும் முதல் 8 நபா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இத்தோ்வை எழுத விரும்புபவா்கள் 9626252500, 9626253300 ஆகிய கைப்பேசி எண்களில் பெயா் பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.