முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியில்லை என வேல்முருகன் அறிவித்தது பற்றி...

Updated On : 25 மார்ச் 2026, 12:05 pm IST
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தவாக தலைவர் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார்.

இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்திய நிலையில், திமுக தரப்பில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்குவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்த வேல்முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கட்சிக்கு உழைத்த முன்னணி தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடியோ வெளியிட்ட அவர்,

“பண்ருட்டி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்காதது குறித்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்கள் பங்கேற்ற பல கூட்டணிகளில் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், கூட்ட்ணிக் கட்சித் தலைவரை அவ்வாறு பேசக் கூடாது என்று அமைச்சர்கள் அறிவுறுத்தாதது எனக்கு வருத்தம் ஏற்பட்டது.

பண்ருட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் சிலர் அவமதித்ததிலும் வருத்தம் இருக்கிறது.

நான் பண்ருட்டி தொகுதியில் நிற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தேன். பண்ருட்டி மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

No Contest in Election! Velmurugan Announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.