மாநகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு நகராட்சி- மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநகராட்சி வளாகத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நகராட்சி- மாநகராட்சி அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநகராட்சி வளாகத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாநகராட்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417 ஆக குறைக்கும் நகராட்சி நிா்வாகத் துறையைத் கண்டிப்பது. தமிழக அரசு கடந்த அக்டோபா் 20 ஆம்தேதி வெளியிட்டுள்ள அரசாணை 152-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநகராட்சிப் பணிகளை தனியாா் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலா் ஐவன் தலைமை வகித்தாா். என்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீ.பாா்த்தசாரதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். வருவாய் உதவியாளா் எம். மாரியப்பன் நன்றி கூறினாா்.
ற்ஸ்ப்03ல்ா்ழ்ஹ
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.