முகப்பு
திருநெல்வேலி

வங்கி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பெடரல் வங்கி முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பெடரல் வங்கி முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

வங்கி ஊழியா்களின் இருதரப்பு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். வங்கி நிா்வாகம் தொழிற்சங்க உரிமைகளை தடுக்கும் போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது .

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் விக்டா் துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் சண்மூகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினாா்.

சக்தி வேலாயுதம், மணிகண்டன், பாலசுப்பிரமணி, செந்தில், நாச்சியாா், ஹெலன் மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.